சுடச்சுட

    

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம்

    By காஞ்சிபுரம்,  |   Published on : 03rd July 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் சிறுவிடுப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

    பொதுப்பணித் துறைக்கு இணையாக ஒன்றியப் பணி மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 9,300 ஊதியத்தில் ரூ. 4,200 தர ஊதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சி இயக்கத்திலுள்ள கண்காணிப்பாளர் நிலையிலான துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்கள், மகளிர் திட்ட அலுவலகங்களிலுள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் அவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை.

    இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 பிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஒருநாள் சிறுவிடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai