சுடச்சுட

  

  பாம்பு கடித்து கணவன் சாவு; மருத்துவமனையில் மனைவி அனுமதி

  By செங்கல்பட்டு  |   Published on : 03rd July 2013 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கலப்ட்டு அருகே வ.உ.சி. நகரைச் சேர்ந்த தம்பதியை விஷப்பாம்பு கடித்ததில் கணவன் செவ்வாய்க்கிழமை இறந்தார். மனைவி, தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  செங்கல்பட்டை அடுத்த வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (50). பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவரும் இவரது மனைவி தேவகியும் (45) செவ்வாய்க்கிழமை காலை தூங்கி எழுந்தபோது தூக்கத்தில் விஷப்பூச்சி கடித்ததுபோல மயக்கம் ஏற்பட்டதை அடுத்து  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

  அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண பூச்சிக் கடி என்று சிசிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக தெரிகிறது. வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் கனகராஜ் மயக்கமடைந்து இறந்தார்.

  இதையடுத்து தேவகியும் மயங்கி விழுந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

  இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai