சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 03rd July 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., வாலாஜாபாத் பா. கணேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

    இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், மொளச்சூர் இரா. பெருமாள், கணிதாசம்பத், தண்டரை மனோகரன், செய்யூர் ராஜி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, ஒன்றியத் தலைவர்கள் தென்னேரி வரதராஜுலு, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து

    கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai