சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம் அருட்பெரும்செல்வி தெருவைச் சேர்ந்தவர் செல்வி (25). இவர், கடந்த 11-ம் தேதி கடைத்தெருவுக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், செல்வியிடம் ஒன்றரை சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுபோல் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த ஜெயந்தி (40) என்பவரிடம் 3 சவரனும், பூதேரி அம்மாளிடம் (65) 6 சவரனும், சீனிவாச ராகவனிடம் (40) மூன்றரை சவரனும், நந்தகுமாரிடம் (41) மூன்றரை சவரன் என 17 சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டது.

    அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழிப்பறி ஆசாமிகளை பிடிக்க எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டார்.

    அதன்படி காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி நபர்களைத் தேடினர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் பஸ் நிலைய ஹோட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து தனிப்படையினர் விசாரித்தனர். 

    அவர்கள் காஞ்சிபுரம் அருகே செம்பரம்பாக்கம் சாலமோன் (எ) இன்பநாதன் (23), அம்பேத்கர் நகர் எழில்மாறன் (27) என்பதும், இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 13 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும் அவர்களை போலீஸார் கைது செய்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai