சுடச்சுட

    

    அண்ணாவின் அரிய புகைப்படங்கள்:  நினைவு இல்லத்துக்கு வழங்க வேண்டுகோள்

    By  காஞ்சிபுரம்  |   Published on : 04th July 2013 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அண்ணாவின் அரிய வகை புகைப்படங்கள் பொதுமக்களிடம் இருந்தால், அவற்றை அவரது நினைவு இல்லத்துக்கு வழங்கி உதவலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.
     அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     ÷காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நிலைவு இல்லம் தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
     விடுமுறை நாள்களில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அண்ணா நினைவு இல்லம் வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு விவரங்களைச் சேகரித்துச் செல்கின்றனர்.
     அண்ணா வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் பொதுமக்களிடம் இருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
     ÷அவற்றை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் வைத்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai