சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் திங்கள்கிழமை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
     ÷காஞ்சிபுரம் காந்தி சாலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். தேவதாஸ் தலைமை வகித்தார்.
     ÷ஆர்.எஸ்.எஸ். மாவட்டத் தலைவர் ஆர். கோதண்டம், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வி. பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து தாக்கி படுகொலை செய்து வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     ÷வெள்ளையப்பனைக் கொலை செய்தவர்களைப் போலீஸôர் கைது செய்து, அவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     இந்து முன்னணி சென்னை மாநகரச் செயலாளர் எஸ்.எஸ். முருகேசன், பா.ஜ.க. நகரச் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட முன்னாள் தலைவர் கே.டி. ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai