Enable Javscript for better performance
காடுவெட்டி குரு  தொடர்ந்து சிறையில் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    காடுவெட்டி குரு  தொடர்ந்து சிறையில் அடைப்பு

    By  காஞ்சிபுரம்  |   Published on : 04th July 2013 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காடுவெட்டி குரு எம்.எல்.ஏ.வை தொடர்ந்து சிறையில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் புதன்கிழமை இரவு உத்தரவிட்டார்.
     காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் ஏப்ரல் மாதம் நடந்த வன்னியர் சங்க பெருவிழாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
     இதை ரத்துசெய்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
     இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்களுக்கு உள்பட்டு, காடுவெட்டி குருவை தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் புதன்கிழமை இரவு ஆணை பிறப்பித்தார். இந்த ஆணை, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai