Enable Javscript for better performance
சாலை விபத்து: முன்னாள்  ராணுவ வீரர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் புதன்கிழமை இறந்தார்.
     ÷விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(49). முன்னாள் ராணுவ வீரர். அவர் தனது மனைவி கவிதாவுடன் வேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். புதன்கிழமை வேலூரில் இருந்து அவர்கள் காரில் சென்னைக்குப் புறப்பட்டனர்.
     ÷காரை டிரைவர் சிவா ஓட்டினார். காஞ்சிபுரம் அடுத்த சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைக்கேட் பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, கார் திடீரென நிலைதடுமாறி முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.
     ÷இதில் படுகாயமடைந்த விநாயகமூர்த்தி அதே இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த கவிதா, டிரைவர் சிவா ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாலுக்கா போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai