Enable Javscript for better performance
பண்ணைத் தோட்டத்தில்  இளம்பெண் கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருப்போரூர் அருகே தனியார் பண்ணைத் தோட்டத்தில் இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது குறித்துப் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     ÷ திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பன்னீர்செல்வம் என்பவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது. அங்கு உள்ள வீட்டில் அவரும், அவரது தாயாரும் அவ்வப்போது தங்கிச் செல்வது வழக்கம்.
     ÷அந்த வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கும், வீட்டில் வேலை செய்வதற்கும் கேளம்பாக்கம் அருகே உள்ள வெலிச்சை கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி(18) என்பவரை பணிக்கு வைத்திருந்தனர்.
     இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பண்ணை வீட்டில் இருந்த செல்வராணியை புதன்கிழமை காலை காணவில்லை. அவரை பன்னீர்செல்வத்தின் தாயார் தேடிப் பார்த்துள்ளார். அப்போது பண்ணைத் தோட்டப் பகுதியில் செல்வராணி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
     தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸôர் சென்று செல்வராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai