சுடச்சுட

    

    புதிய அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

    By  காஞ்சிபுரம்,  |   Published on : 04th July 2013 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்ரமேரூர் அருகே புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் நடைபெற்று வருகிறது.
     ÷சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, நடப்பாண்டில் 5 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் கிராமத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
     ÷அதன்படி இக்கல்லூரி இந்த கல்வியாண்டு முதல் திருப்புலிவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட உள்ளது. இந்த புதிய கல்லூரியில் இளநிலை தமிழ், இளநிலை ஆங்கிலம், இளநிலை கணிதம், இளநிலை வணிகவியல், இளநிலை கணினி அறிவியல் ஆகிய பாட வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
     ÷இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திருப்புலிவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கல்லூரிக்கான அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
     இக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்கள் ரூ.27 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
     ÷பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்புலிவனம், உத்தரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் 603 406 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்லூரியை வரும் ஜூலை 25-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்க உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai