சுடச்சுட

    

    ரியல் எஸ்டேட்  உரிமையாளர் மர்மச் சாவு:  காதலி கைது

    By  செங்கல்பட்டு  |   Published on : 04th July 2013 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்பாக்கம் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது கள்ளக்காதலியைப் போலீஸôர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     ÷இது குறித்துப் போலீஸôர் தரப்பில் தெரிவித்தது:
     ÷கல்பாக்கம் சட்ராஸ் அருகே காரில் ஆண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இறந்து கிடப்பதாக புதன்கிழமை போலீஸôருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சட்ராஸ் போலீஸôர் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சுரேஷ்(32) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸôர் மேலும் விசாரணை மேற்கெண்டனர்.
     ÷அதில், சுரேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி ஷீலா. இருவருக்கும் 2010-ல் திருமணம் நடந்தது. ஷீலா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். சட்ராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரீனா. அவர் ஏற்கனவே திருமணமானவர்.
     ÷வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த ஜெரீனாவின் கணவர் அவரைக் கைவிட்டு விட்டார். இந்நிலையில் சுரேஷூக்கும், ஜெரீனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பழகி வந்துள்ளனர்.
     சுரேஷ் அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்ததுடன், அவருக்குக் கார் ஒன்றையும் வாங்கித் தந்துள்ளார்.
     சுரேஷூக்குத் திருமணமான பிறகு இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. எனினும் ஜெரீனா அடிக்கடி தன்னை வந்து சந்திக்கும்படி அவரை வற்புறுத்தி வந்துள்ளார்.
     செவ்வாய்க்கிழமை ரியல் எஸ்டேட் விஷயமாக சுரேஷ் தனது காரில் கல்பாக்கம் சென்றுள்ளார். அப்போது ஜெரீனா அழைத்ததன் பேரில் சுரேஷ் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தனது காரை நிறுத்திவிட்டு மொபெட்டில் ஜெரீனா வீட்டுக்குச் சென்றுள்ளார்.
     இரவு சுரேஷ்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
     இதையடுத்து ஜெரீனா, சுரேஷ் வாங்கிக் கொடுத்த காரில் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
     ÷அங்கு சுரேஷ் இறந்து விட்டதாக டாக்டர் கூறியதன் பேரில் காரில் அவரது உடலை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். பின்னர் பாதி வழியில் காரிலேயே சுரேஷ் உடலை விட்டு விட்டு விட்டு அங்கிருந்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
     ÷இதையடுத்து ஜெரீனாவைப் போலீஸôர் கைது செய்தனர். சட்ராஸ் காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் கொலை செய்யப்பட்டாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai