Enable Javscript for better performance
அரசு பஸ் உடைப்பு: 2 பேர் கைது - Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் அருகே புதன்கிழமை இரவு அரசு பஸ் உடைத்தது தொடர்பாக 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை இரவு உத்தரவிட்டார். இந்நிலையில் புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் (தடம் எண்: 121) காஞ்சிபுரத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலை தாமல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது 2 பேர் பஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்ஸின் முன் கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. இதில் பஸ் டிரைவர் ஸ்ரீதருக்கு (36) லேசான காயம் ஏற்பட்டது. பயணிகள் காயமின்றித் தப்பினர்.

    இது குறித்து டிரைவர் ஸ்ரீதர் பாலுசெட்டிசத்திரம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இதுதொடர்பாக தாமல் சாலைத் தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகன் மணிமாறன் (21), செüந்திரராஜன் மகன் ஈஸ்வரமூர்த்தி (19) ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai