Enable Javscript for better performance
இளம்பெண் கொலையில் இளைஞர் கைது - Dinamani

சுடச்சுட

    

    கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பன்னீர்செல்வம் என்பவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் வேலை செய்துவந்த கேளம்பாக்கம் அருகே வெளிச்சை கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி (18) செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸார் செல்வராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை

    மேற்கொண்டுள்ளனர்.  விசாரணையில் அதே பண்ணைத் தோட்டத்தில் வேலை செய்யும் வெளிச்சைக் கிராமத்தைச் சேர்ந்த கண்ணனிடம் சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணன், செல்வராணியை ஒருதலையாகக் காதலித்ததாகவும், தனது காதலுக்கு மறுப்புத் தெரிவித்ததாலும், கொலை செய்ததாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் கண்ணனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai