சுடச்சுட

  

  காஞ்சிபுரம் மாவட்டம் பொற்பந்தல் கிராமத்தில் நடைபெற்றுவரும் கல்குவாரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

  காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கத்தை அடுத்து உள்ளது பொற்பந்தல் கிராமம். இக்கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதை தடை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் வழங்கிய புகார் மனு: பொற்பந்தல் கிராமத்தில் 300 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒருசில குடும்பங்களைத் தவிர அனைவருமே ஏழை மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இக்கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கல்குவாரி நடந்து வருகிறது. கல்குவாரி ஆழமாகத் தோண்டத் தோண்ட விவசாய கிணறுகளில் தண்ணீர் வறண்டுவிட்டது. விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

   கல்குவாரியில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பயங்கர சத்தத்துடன் வெடிகள் வைக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விரிசல் விழுந்துள்ளது. தொடர்ந்து இந்த குவாரி இயங்கும்பட்சத்தில் மேலும் என்னென்ன சேதங்கள் ஏற்படுமோ என்று தெரியவில்லை. எனவே கல்குவாரியை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai