சுடச்சுட

    

    காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுóள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஹைதராபாத்தில் உள்ள அறிவியல் அறிஞர் பேராசிரியர் எஸ். ஜெயராம ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ளார். அப்போது அங்கு பல புதிய படிப்புகளுடன் மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே வருமானம் ஈட்டும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.  ஜப்பானிய, ஜெர்மானியப் பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பல்கலைக்கழகத் தர நிர்ணயக் குழுவிலும், பல்கலைக்கழக மானிய கமிஷனின் குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆந்திர மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினராகவும், இந்திய வெளியுறவுத் துறையின் கலாசார உறவுக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai