சுடச்சுட

    

    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் சிற்பக்கலை ஸ்தபதி இறந்தார்.

    மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி பகுதியைச் சேர்ந்த கோவிந்து மகன் லோகநாதன். இவர் சிற்பக்கலை ஸ்தபதி. இவர் வடகடம்பாடியில் சிற்பக்கலைக்கூடம் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கிவிசப்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளைச்சாவு ஏற்பட்டதால் இறந்தார்.

    வடகடம்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டது. திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரன், மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி, வடகடம்பாடி ஊராட்சி தலைவர் கோ.ஆதிமூலம் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் சாரதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai