Enable Javscript for better performance
பள்ளி செல்லா 5 குழந்தைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் அருகே பள்ளிக்குச் செல்லாமல் பணியில் ஈடுபட்டிருந்த 5 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் குழந்தைகள் கண்காணிப்பகம் என்ற தனியார் தன்னார்வத் தொண்டு அமைப்பு காஞ்சிபுரம் அருகே வெள்ளாகுளம் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தியது.

    அப்போது வெள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, சத்யா, சித்ரா மற்றும் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, சுமித்ரா ஆகியோர் பள்ளிக்குச் செல்லாமல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் இருளர் இனைத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

     இதைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர்களிடம் குழந்தைகள் கண்காணிப்பக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.

     அதன்படி அக்குழந்தைகள் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமை சேர்க்கப்பட்டனர். இதில் சத்யா, சித்ரா ஆகியோர் 4-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை.

    எனவே அவர்கள் வயதுக்கு ஏற்ப 6-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். மற்ற 3 குழந்தைகளும் பள்ளிக்கே சென்றதில்லை. அவர்களும் அவரவர் வயதுக்கேற்ப சின்னதம்பி 3-ஆம் வகுப்பிலும், தனலட்சுமி, சுமித்ரா ஆகியோர் 1-ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ம. சிவப்பிரகாசம் இலவச சீருடை, புத்தகங்களை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai