சுடச்சுட

  

  மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் போட்டியின்றித் தேர்வு

  By காஞ்சிபுரம்,  |   Published on : 05th July 2013 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 21 இயக்குநர்கள் செவ்வாய்க்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

  கூட்டுறவுச் சங்கங்களில் 3-ம் கட்டமாக மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலைகளில் இயக்குநர்களுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  மேலும் ஜூலை 8-ம் தேதி தேர்தல், ஜூலை 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்குள்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்புமனு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. 21 பேரைத் தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலுக்கு, அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பெண்கள், 4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் என மொத்தம் 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

  இவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் 21 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

  இது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  21 இயக்குநர்கள் சேர்ந்து தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 15-ம் தேதி நடைபெறும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai