சுடச்சுட

    

    செங்கல்பட்டு அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள 42 சென்ட் நிலத்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்து சம்ய அறநிலையத் துறையினர் புதன்கிழமை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனர்.

    செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள 70 ஆண்டுகள் பழமையான திருமலை திரையரங்கக் கட்டடம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. செங்கல்பட்டில் உள்ள திரையரங்கங்களில் மிகப்பழமையான இத்திரையரங்கம் நிர்வாக பிரச்னைகள் காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்காமல் இருந்துவந்தது. கோயிலுக்குச் சொந்தமான இப்பகுதியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கும் வகையில் வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவந்த இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் புதன்கிழமை கோயிலுக்குச் சொந்தமான இந்நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த திரையரங்க கட்டடத்தை மீட்கும் வகையில் திரையரங்க கட்டட வாயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai