சுடச்சுட

  

  காஞ்சிபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அரசு ஊழியரிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

  காஞ்சிபுரம் வரதாரஜபெருமாள் கோயில் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் நாராயணன். அவரது மனைவி ஜெயா(51). அவர் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் முதல்நிலை வரைவாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

  அவர் செவ்வாய்க்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது இரு சக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஜெயா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai