Enable Javscript for better performance
ஆடு, மாடுகள் காய்ச்சலுக்கு சிகிச்சை - Dinamani

சுடச்சுட

    

    ஏரிகள், தரிசு நிலங்களில் விளைந்துள்ள, புதிய புல்லை மேயும் ஆடு, மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம் என கால்நடை உதவி இயக்குநர் ராஜன் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் கூறியது: கோடை வறட்சிக்குக்கு பின்னர் பருவமழை துவங்கியுள்ளது. இதனால், ஏரிகள் மற்றும் தரிசு நிலங்களில் புதிய புற்கள் முளைத்துள்ளன. இவற்றை மேயும் ஆடு, மாடுகளுக்கு பருவமாற்று காலங்களில் ஏற்படும் காய்ச்சல் வருவது வழக்கம். காய்ச்சல் அறிகுறிகளை அறிந்து, கால்நடை பராமரிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும். அருகில் உள்ள கால்நடை மருத்துவரையும் அணுகலாம். காய்ச்சலின் தன்மை அதிகமாக இருந்தால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai