சுடச்சுட

    

    அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

     அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில், இசைப்பள்ளி நடைபெறுகிறது. இங்கு குரலிசை, பெருவாங்கியம்(நாதசுரம்), தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.

      இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, சீருடை, காலணிகள், மிதிவண்டி ஆகியவை வழங்கப்பட உள்ளன. இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் மாவட்ட அரசு கலை பண்பாட்டு மைய வளாகம், கோட்டைக்காவல் கிராமம், சதாவரம் (அரசு காது கேளாதோர் பள்ளி) ஓரிக்கை(அஞ்சல்) காஞ்சிபுரம் என்ற முகவரியை அணுகலாம் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai