சுடச்சுட

    

    இளவரசன் சாவில் நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 06th July 2013 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தர்மபுரி இளவசரன் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளவசரன், திவ்யா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இளவரசன் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

     அவரது மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டச் செயலாளர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இந்திரா, ஒன்றியச் செயலாளர் திருமாள்தாசன், அம்பேத்கர் பாசறை நகரச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai