சுடச்சுட

    

    உணவகங்களில் காய்ச்சிய குடிநீர்:சுகாதாரத்துறை அறிவுரை

    By காஞ்சிபுரம்  |   Published on : 06th July 2013 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவகங்களில், பொதுமக்களுக்கு குடிப்பதற்கு வென்னீர் வழங்க, சம்பந்தப்பட்ட உரிமையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியது: பருவமழை துவங்குவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகே, தண்ணீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும். குடிநீரை நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். பழைய டயர், மட்டை உள்ளிட்ட கழிவுப்பொருள்களை குடியிருப்புப் பகுதிக்குள் குவித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில், வாடிக்கையாளர்களுக்கு வென்னீரை வழங்க, அதன் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் உணவகங்கள் குறித்து, பொதுமக்கள், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு 044-2722 2019 என்ற தொலைபேசியிலோ அல்லது 94435 47147 என்ற செல்போன் எண்ணிலே தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai