சுடச்சுட

    

    ஓய்வூதியர்களுக்கான நேர்காணலில் கலந்து கொள்ளாதவர்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்டக் கருவூல அலுவலர் காத்தவராயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேர்காணலில் கலந்து கொள்ளாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இதர ஓய்வூதியம் பெறுவோர் ஜூலை 31-ஆம் தேதிக்குள், சம்மந்தப்பட்ட சார்நிலைக் கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai