சுடச்சுட

  

  சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

  By செங்கல்பட்டு,  |   Published on : 06th July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாமல்லபுரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர்கள் பி.ராஜசேகரன், ஜி.மதியழகன், டி.புனிதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போதைய தலைவர் எச்.பகலுதீன் தலைமை தாங்கினார்.  வீ.பாலசந்தர் ஆண்டறிக்கை வாசித்தார்.

  முன்னாள் மாவட்ட கவர்னர் எஸ்.மகேஷ் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் 2013-14-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தலைவராக கே.வேலுச்சாமி, செயலாளராக ஏ.எச்.அப்துல்ஹமீது, பொருளாளராக சி.ராமச்சந்திரன் ஆகியோர் பதவியேற்றனர். இவர்களுக்கு அரிமா சங்க மாவட்ட கவர்னர் கே.பி.குமணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  விழாவில் மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

   விழாவில் ஆதரவற்ற முதியோர்க்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை, நலிவடைந்த விதவை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் அரிமா சங்க நிர்வாகிகள் கே.பாண்டியன், எஸ்.செல்லக்கண்ணு, கே.எஸ்.கோதண்டராமன், கே.கருப்பசாமி, ஏ.கே.நடராஜன், டி.கிருஷ்ணராஜ், வி.இ.உமாபதி, ஓம்.பிரகாஷ்ரத்தோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai