சுடச்சுட

  

  தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 4 பா.ம.க.வினர் மீண்டும் கைது

  By காஞ்சிபுரம்,  |   Published on : 06th July 2013 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 4 பா.ம.க.வினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஆந்திர மாநில அரசு பஸ், தனியார் நிறுவன பஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் உள்பட 4 பஸ்கள் எரிக்கப்பட்டன.

  இது தொடர்பாக 10 பேர் மற்றும் பா.ம.க. எம்எல்ஏ காடுவெட்டி குரு என மொத்தம் 11 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டது.

   இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அதிகாரங்களுக்கு உள்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  இதையடுத்து காடுவெட்டி குரு, தாமல் மணிமாறன், மாரி, இளங்கோ, ஆனந்தன், பழனி ஆகியோர் 2-வது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

   இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கூரம் விஸ்வநாதன், கூரம் ஊராட்சி மன்றத் தலைவர் குமாரசாமி, தீபன் சுரேஷ், தினேஷ் ஆகிய 4 பேரை மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

  இதுவரை காடுவெட்டி குரு உள்பட 10 பா.ம.க.வினர் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai