சுடச்சுட

  

  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் உத்தரமேரூர் பணிமனை அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  மத்திய சங்க துணைச் செயலாளர் து.சுந்தர் தலைமை வகித்தார். உத்தரமேரூர் பணிமனை ஓட்டுனர் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ஜி.திருநாவுக்கரசு, ஏ.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 2010 ஊதிய ஒப்பபந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்லமுத்து வரவேற்றார். பத்மநாபன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai