Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      கட்சியின் நகரச் செயலாளர் ஏ. வாசுதேவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் ஜி. மோகன் பேசுகையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவு நாட்டுக்கு உகந்ததல்ல.

    பொதுத்துறை பங்குகளை ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் விற்று, அதில் வரும் பணத்தில் பட்ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்யப் போவதாக மத்திய அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

      இதில் செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், சிவகுமார், நேரு, சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai