சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூர் அருகே நள்ளிரவில் மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்களை மடக்கி கத்தியால் குத்தி செலபோன் பறித்து சென்ற மர்ம நபர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

       சுங்குவார்சத்திரம் அடுத்த பண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் குரியன் (29). அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (28). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் குரியன் மற்றும் வினோத் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை வழியாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் அருகே வரும்போது மோட்டார்சைக்கிளை மடக்கிய மர்ம நபர்கள் சிலர் குரியனை கத்தியால் குத்திவிட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

      மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில் கழுத்து, தோள்பட்டை, கை ஆகிய பகுதிகளில் காயமடைந்த குரியன் ஸ்ரீபெரும்புதூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai