சுடச்சுட

    

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் மாநில அரசுகளின் பொது விநியோகத்தை முடக்கும் அபாயம் உள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் குற்றஞ்சாட்டினார்.

    அம்பேத்கரின் பிறந்தநாள் விழா, இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம்

    கூறியது:

    மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு அவசர சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இது மாநில அரசுகளின் உரிமைகளை நெருக்கடிக்கு உட்படுத்தும் திட்டம். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநில அரசுகளின் பொது விநியோகத் திட்டத்தை முடக்கும் அபாயம் உள்ளது. பொது விநியோகத் திட்டம் மாநில அரசுகளின் அதிகாரங்களுக்குகீழ் உள்ளது. மத்திய அரசின் உரிமைக்குகீழ் உள்ள ராணுவம், வங்கித்துறை உள்ளிட்டத் துறைகளில் அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இதுபோன்ற சட்டத்தை கொண்டு வருவதன் அவசியம் என்ன?

    ஜெயலலிதா திட்டம் தேசிய அளவில் வலுப்பெறுகிறது: தமிழகத்தில் மாதத்துக்கு 20 கிலோ அரிசி பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின்படி கிலோ அரிசி ரூ.5-க்கு 5 கிலோ வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு அவசரச் சட்டம் தேவையா? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் முழுக்க, முழுக்க தேர்தல் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. இது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டதா? தமிழக முதல்வரின் திட்டங்கள் இன்று தேசிய அளவில் வலுப்பெறுகிறது.

     குறைந்தபட்ச

    செயல்திட்டத்தின் கதி என்ன?

    இன்று அனைத்தும் தனியார்மயம் ஆகிவரும் இந்த சூழ்நிலையில், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை தேர்தல் வாக்குறுதியாக குறைந்தபட்ச செயல்திட்டமாக மத்திய அரசு அறிவித்தது. இப்போது அத்திட்டத்தின் கதி என்ன? பதவி உயர்வின்போது இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்துவருகிறது. இதற்கெல்லாம் அவசரச் சட்டம் கொண்டுவராத மத்திய அரசு, உணவுப் பாதுகாப்புக்கு அவசர சட்டம் கொண்டுவந்தது ஏன் என்றார்.

    பேட்டியின்போது கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சி. செங்குட்டுவன், மாநில பொருளாளர் கே. நாகராஜன், மாநில துணைத் தலைவர் தலித் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai