சுடச்சுட

  

  மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்: பா.ம.க. கண்டனம்

  By காஞ்சிபுரம்  |   Published on : 07th July 2013 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 10 பேரை சிறையில் அடைத்ததற்கு பா.ம.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் 192 பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் மதுராந்தகத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடந்தது.

  விழாவுக்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன். கங்காதரன் தலைமை வகித்தார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்ட 10 பேர் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மரக்காணம் வன்முறையின்போது உயிரிழந்த விவேக், செல்வராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  வன்னியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் செல்வகுமார், மாநில செயலாளர் பழனிவேல்ராஜன், பா.ம.க. மாவட்டத் தலைவர் கோபால கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai