சுடச்சுட

  

  ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு திரளணி வரும் ஜூலை 18 மற்றும் ஜூலை 23 ஆகிய நாட்களில் பாரதி ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி, கடலூரில் நடைபெற உள்ளது.

   இதில் சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் ஜெனரல், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் மற்றும் அனைத்து பிரிவு பதவிகளுக்கும் வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

  காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை அணுகி இதுகுறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2226 2023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆள்சேர்ப்பு திரளணியில் தகுதியுள்ள இளைஞர்கள் அதிகளவில் கலந்துகொண்டு பயனடையலாம் என்று குறிப்பிடப்

  பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai