Enable Javscript for better performance
டயர் விற்பனை மையத்தில் ரூ.1.84 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    டயர் விற்பனை மையத்தில் ரூ.1.84 லட்சம் திருட்டு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 08th July 2013 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்மருவத்தூர் அருகே தனியார் டயர் விற்பனை மையத்தின் பூட்டை உடைத்து ரூ.1.84 லட்சத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜூலியர் சீசர். இவர் அதே பகுதியில் டயர் விற்பனை மையம் நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு விற்பனை மையத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை விற்பனை மையத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது குறித்து ஜூலியர் சீசருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது, வங்கியில் செலுத்த வைத்திருந்த ரூ.1.84 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்புள்ள டயர்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில், மேல்மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai