சுடச்சுட

  

  பாசனக் கால்வாய் மீது சிறுபாலங்கள் கட்டியவர்களுக்கு நோட்டீஸ்

  By ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 08th July 2013 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்குச் செல்லும் பெரிய பாசனக் கால்வாய்கள் மீது சிறுபாலங்கள் கட்டிய தனியாருக்கு பொதுப்பணித் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

  ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட விவேகானந்தர் நகர் பகுதியில் விவசாய விளைநிலங்களை வாங்கிய தனியார் சிலர், அவற்றை வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்ய லே-அவுட்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் விவசாய விளைநிலங்களை வீட்டுமனைகளாகப் பிரிக்க, அதை ஒட்டிச் செல்லும் பாசனக் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தும், பாசனக் கால்வாய்கள் மீது வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்துச் செல்லும் வகையில் சிறுபாலங்களை தற்போது அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தினமணி செய்தி எதிரொலியாக பாசனக் கால்வாய்களை ஆக்கிரமித்தும் பொதுப்பணித் துறையின் அனுமதியின்றி கால்வாய்கள் மீது சிறுபாலங்களை அமைத்த தனியாருக்கு, பாலங்களை வரும் 15 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என பொதுப்பணித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

  இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சம்பத் கூறுகையில், "15 நாட்களுக்குள் அவர்கள் பாலங்களை அகற்றாவிட்டால் பொதுப்பணித்துறை சார்பில் பாலங்கள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்' என தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai