மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
By காஞ்சிபுரம், | Published on : 08th July 2013 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடந்தது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர் அழகுவேல் பேசியது: ஊராட்சிப் பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாயக்கழிவு நீர், பன்னாட்டு நிறுவனங்களின் கழிவுநீர் ஆகியன பாதுகாப்பற்ற முறையில் ஏரி, குளங்களில் கலந்து மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். ஏரி, கண்மாய், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்துக் கால்வாய்களை சீர்செய்து மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில் மழைநீர் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஒலி, ஒளி காட்சிகள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.