சுடச்சுட

  

  மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின காட்சியகம்

  By செங்கல்பட்டு,  |   Published on : 08th July 2013 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின காட்சியகம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமல்லபுரம் பொதுமக்கள் சார்பில் பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி  நன்றி தெரிவித்துள்ளார்.

  அவர் வெளியிட்ட அறிக்கை:

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், உலக அளவில் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் வரவழைக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரையில் ரூ.250 கோடி செலவில்,

  கண்ணாடி சுரங்கங்களின் வழியாக வழியாகச் சென்று கடல்வாழ் தாவரங்கள், விலங்கினங்கள் கடல் சூழலில் உள்ளது போன்று பார்த்து கண்டு களிக்கும் வகையில் கடல்வாழ் உயிரின காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  இக்ககாட்சியகம் அமைவதால் மாமல்லபுரம் நகரம் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இதற்காக முதல்வருக்கு மாமல்லபுரம் நகர மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்

  டுள்ளது.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai