சுடச்சுட

    

    வெண்டை சாகுபடிக்கு முன் விதை நேர்த்தி அவசியம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 08th July 2013 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெண்டையை முளைப்பு திறன் அறிந்து, சாகுபடி செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. விவசாயிகள், வரும் ஆடிப்பட்டத்தில், காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய, தயார் நிலையில் உள்ளனர். சில விவசாயிகள், வெண்டையை தேர்வு செய்து, சாகுபடி செய்து வருகின்றனர்.

    பூச்சி தாக்காத வீரிய ஒட்டுரக விதையின், விலை அதிகமாக உள்ளது. இது தரமாகவும், முளைப்பு திறன், 65 சதவீதம் இருப்பது அவசியம். இவைகளைப் பயன்படுத்தி, 45-க்கு 30 செ.மீ., இடைவெளி விட்டு நடவு செய்தால், நல்ல மகசூல் பெறலாம்.

    எனவே, விவசாயிகள் தங்களிடம் உள்ள விதையைப் பயன்படுத்துவதற்கு முன், அதிலிருந்து 100 கிராம் எடையுள்ள விதையை, விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், என்ற முகவரிக்கு, ரூ. 30 கட்டணத்துடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். பரிசோதனை முடிவுகளை பெற்ற பின், விதைப்பு மேற்கொண்டு பயனடைய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai