சுடச்சுட

    

    வைப்பூரில் பழமையான மரங்கள் வெட்டத் தடை

    By ஸ்ரீபெரும்புதூர்,  |   Published on : 08th July 2013 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைப்பூர் கிராமத்தில் கங்கையம்மன் கோயில் குளத்தை சுற்றியுள்ள பழமையான மரங்களை வெட்டத் தடை விதிப்பது என துணை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    குன்றத்தூர் ஒன்றித்துக்கு உள்பட்டது வைப்பூர் கிராமம். இக்கிராமத்தில் பழமை வாழ்ந்த சிவன் மற்றும் கங்கையம்மன் கோயில் அருகில் கோயில் குளம் உள்ளது. இந்தக் குளம் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி பழாடைந்து இருந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்து நீரைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

    இதையடுத்து வைப்பூர் ஊராட்சி நிர்வாகம் குளத்தை சீரமைக்க முடிவு செய்து அதன்படி குளக்கரையில் இருந்த பல ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டும் பணி தொடங்கியது.

    இலுப்பை மரம், வேப்ப மரம், காட்டுவா மரம் உள்பட 7 மரங்கள் வெட்டப்பட்டது.  இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த் துறையினருக்கு புகார் மனு அனுப்பினர்.

    இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் துணை வட்டாட்சியர் ரவிகுமார் தலைமையில் காவல் துறையினர், ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இதில், குளக்கரையில் உள்ள பழமையான மரங்களை வெட்டத் தடை விதிப்பது, வெட்டப்பட்ட மரங்களை ஏலம் விட்டு வரும் வருவாயை ஊராட்சி நிதியில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் மரங்களை வெட்டாமல் கோயில் குளத்தைப் புதுப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai