சுடச்சுட

  

  அம்மா திட்ட முகாமில் தேர்வு செய்யப்பட்ட 1304 பேருக்கு ஓய்வுதிய இறுதி ஆணை வழங்கும் விழா செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  கடந்த 26.3.2013 முதல் 11.6.2013 வரை செங்கல்பட்டு வட்டத்தில் அம்மா திட்ட  முகாம் நடைபெற்றது. இதில், சமூக  உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அந்தந்த முகாம் அலவலர்களால் தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 22 கிராமங்களில் உள்ள 1304 பேருக்கு ஓய்வூதிய இறுதி ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  தனி வட்டாட்சியர்(சமூக பாதுக்காப்புத் திட்டம்) புஷ்பலதா தலைமை வகித்து வரவேற்றார். வட்டாட்சியர்(ஆதிதிராவிட நலம்) மரியதாஸ், மறைமலைநகர் நகர்மன்றத் தலைவர் கோபிகண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில், விதவை, முதிர்கன்னி உள்ளிட்டோருக்கான ஓய்வூதிய இறுதி ஆணையை செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்லப்பா, காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சம்பத்குமார், ஆகியோர் வழங்கினர். ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் மரியதாஸ் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai