சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட 939 மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

    ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், மாத்தூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா அந்தந்த பள்ளி வளாகங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், உத்தரமேரூர் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மதுரமங்கலம் பள்ளியைச் சேர்ந்த 214 மாணவர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 234 மாணவிகளுக்கும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 246 மாணவர்களுக்கும் மாத்தூர் பள்ளியை சேர்ந்த 173 மாணவர்களுக்கும், பண்ருட்டி பள்ளியைச் சேர்ந்த 72 மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழாவில் ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, மாவட்டக் கவுன்சிலர் குமாரவடிவேலு, ஒன்றியகுழு துணைத் தலைவர் சிவகுமார், ஒன்றியக் கவுன்சிலர்கள் பாபு, பாலமுருகன், குருமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரவி, தமிழரசு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai