சுடச்சுட

  

  சேது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

  By காஞ்சிபுரம்,  |   Published on : 09th July 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க.வினர் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முனைவர் இரா. சபாபதிமோகன் கலந்துகொண்டார்.

  சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற முன்வராத அ.தி.மு.க. அரசை கண்டிக்கிறோம் என்று ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட அவைத் தலைவர் கே. சுந்தர், துணைச் செயலாளர்கள் பொன்மொழி, எட்டியப்பன், மல்லிகா மோகன், பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், காஞ்சிபுரம் நகரச் செயலாளர் சேகர், காஞ்சிபுரம் ஒன்றியச் செயலாளர் குமார், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ. வைத்தியலிங்கம் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

  போக்குவரத்து மாற்றம்: வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் உத்தரமேரூர் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தி.மு.க.வினரின் வாகனங்கள் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்தன.

   இதனால் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், சித்தூர் செல்லும் பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து உத்தரமேரூர், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பஸ்களும் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai