சுடச்சுட

  

  செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

  ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையின்போது பலமான காற்று வீசியது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அண்ணாநகர் 9-வது குறுக்குத் தெருவில் ஒரு மரம் முறிந்து விழுந்தது. இதனால் மின்சார வயர் அறுந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மின்துண்டிப்பு செய்யப்பட்டது. இதனால் அங்குள்ள குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டது. இரவு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர். திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் மரம் அப்புறப்படுத்தப்பட்டு, மின்கம்பங்களை மாற்றி மின்சாரம் சீரானது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai