சுடச்சுட

    

    பழுதாகி நின்ற பஸ் மீது லாரி மோதி ஒருவர் சாவு

    By காஞ்சிபுரம்  |   Published on : 09th July 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயணி இறந்தார்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து காரைக்குடிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அரசு பஸ் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அந்த பஸ் மேல்மருவத்தூர் அருகே சிறுநாவலூர் என்ற இடத்தில் சென்றபோது பழுதாகி சாலை ஓரத்தில் நின்றது.  இதைத் தொடர்ந்து வேறு பஸ்ஸில் பயணிகளை ஏற்றும் பணியில் நடத்துநர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். சில பயணிகள் வேறு பஸ்ஸில் ஏற்றி விடப்பட்டனர். மற்ற பயணிகள் பழுதாகி நின்ற பஸ்ஸின் முன் பகுதியில் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக சென்ற லாரி பழுதாகி நின்ற அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பஸ் முன்னால் நகன்று, வேறு பஸ்ஸýக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. இதில் சென்னை பாடியைச் சேர்ந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தலைமறைவானார். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai