Enable Javscript for better performance
பஸ்-லாரி மோதல்: 6 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பஸ் மற்றும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஸ்ஸில் பயணம் செய்த 6 பேர் காயம் அடைந்தனர்.

    பொன்னேரி பகுதியிலிருந்து திருவள்ளூர் பாப்பரம்பாக்கம், மண்ணூர், ஸ்ரீபெரும்புதூர் வழியாக அரசு பஸ் தடம் எண் 160ஏ காஞ்சிபுரம் நோக்கி திங்கள்கிழமை காலை சென்றுகொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த தண்ணீர் லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த முகமது ரபீக் (31), அன்னம்மாள் (58), விசாலாட்சி (52), முனுசாமி, நடத்துநர் ராஜசேகர் (32) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர்.

     காயமடைந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai