Enable Javscript for better performance
அவதூறு பேச்சு: காடுவெட்டி குருவுக்கு சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    அவதூறு பேச்சு: காடுவெட்டி குருவுக்கு சம்மன்

    By காஞ்சிபுரம்,  |   Published on : 10th July 2013 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது அவதூறாகப் பேசியதாக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவுக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தில் கடந்த 2013 மார்ச் 28-ஆம் தேதி பா.ம.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் மீது அவதூறாகப் பேசினாராம்.

     இதுதொடர்பாக தமிழக அரசின் அனுமதியுடன் காடுவெட்டி குரு மீது காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஐயம்பேட்டை சம்பத் மனு தாக்கல் செய்தார்.

       இந்த மனுவை நீதிபதி செல்வக்குமார் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்குத் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு காடுவெட்டி குருவுக்கு சம்மன் அனுப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai