சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 17 அகதிகள் பிடிபட்டனர்

    By காஞ்சிபுரம்  |   Published on : 10th July 2013 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற புரோக்கர் உள்பட 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காட்டில் சந்தேகப்படும்படியான சிலர் கடந்த 2 நாள்களாக தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் போலீஸார் திங்கள்கிழமை இரவு ஊத்துக்காடு சென்று விசாரித்தனர்.

       தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது.

       இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை ஆணையூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சுகந்தகுமார் (33), அவரது மனைவி மேரி சுலோசனா (27), திருநெல்வேலி கோபாலசமுத்திரம் சுப்பிரமணியபுர அகதிகள் முகாமைச் சேர்ந்த ராமசாமி மகன் கர்ணன் (31), அவரது மனைவி சந்திரிகா (29), அவர்களது மகன் சந்தோஷ்குமார் (10), மகள் ரஞ்சன்தேவி (6), சுந்தரலிங்கம் மகன் விமலநாதன் (36), அவரது மனைவி விஜயேந்திரி (33), அவர்களது மகன் சுடர்மணி (7), சந்தியா பிள்ளை மகன் அந்தோனி பிள்ளை (38), தவராஜா மகன் பி.ஏ. பட்டதாரி கரண் (21), குருசாமி மகன் பேச்சிமுத்து (20), மாரிமுத்து மகன் சிவா (27), பொன்னையா மகன் கேதீஸ்வரன் (30), திசநாயகா மகன் ரமேஷ் (38) மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த அந்தோனி மகன் சுரேஷ் (41), அவரது மகன் அந்தோனி சார்லஸ் (16) ஆகிய 17 பேர் இருப்பது தெரியவந்தது. அவர்கள் சென்னை அல்லது கடலூரில் இருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

        ஊத்துக்காட்டைச் சேர்ந்த மீனவர் ஜோதிராஜ் (50) புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாசம் (35) செயல்பட்டார்.

       இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள போலீஸ் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

     இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் தவிர மற்ற அகதிகள் மற்றும் புரோக்கர் ஜோதிராஜ், அவருக்கு உதவியாக இருந்த ஆட்டோ டிரைவர் பிரகாசம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

       மேலும் அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடை

    த்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai