சுடச்சுட

  

  புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.

   இது குறித்து ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள் கூறியது: நாங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. சொந்த நாட்டில் வாழ வழியின்றிதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் இங்கு எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. குறைந்த கூலிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மாலை 6 மணிக்குள் முகாமுக்குள் வரவில்லை என்றால், எங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். படித்த பட்டதாரிகளுக்கும் நல்ல வேலைவாய்ப்பு இல்லை. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி அதே கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாங்கும் கூலிக்கு குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

  எங்கள் உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது எங்களைத் தொடர்பு கொண்டு பேசுவர். அங்கு வசதியுடன், சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

     6 மாதம் தங்கிவிட்டால் ஆஸ்திரேலியா நாட்டு குடியிரிமை கிடைத்துவிடுகிறது. இந்தியாவில் இருந்து வரும் இலங்கை அகதிகளை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை.

     கடந்த 2 தலைமுறையாக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இப்போது ஒரு வாழ்க்கையைத் தேடிச் செல்ல நினைக்கிறோம். எனவே அரசு எங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கண் கலங்கியவாறு

  தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai