Enable Javscript for better performance
பசுமை வீடு  பணி உத்தரவுக்காக ஓராண்டு காத்திருப்பு- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வீடு  பணி உத்தரவுக்காக ஓராண்டு காத்திருப்பு

    By  காஞ்சிபுரம்  |   Published on : 11th July 2013 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை வீடுகள் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடந்த ஓராண்டாக பணி உத்தரவுக்காக காத்திருப்பதாக உத்தரமேரூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.
     ÷இதுகுறித்து உத்தரமேரூர் வட்டம் திருவாணைக்கோயில் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய மனு: திருவாணைக்கோயில் ஊராட்சியில் கடந்த 2012 மே 1-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரின் சூரிய மின் விளக்குடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது பெயர்களும் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வீடுகட்டுவதற்கு பணி உத்தரவு வழங்கப்படவில்லை. நாங்களும் எங்களது கூரைவீடுகளை பிரித்து விட்டு சிரமப்பட்டு வருகிறோம். ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்துவிட்டேன் என்று கூறிகிறார். எனவே எங்களுக்கு உடனடியாக வீடு கட்ட பணி உத்தரவு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai