சுடச்சுட

    

    மக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மீண்டும் மூடல்

    By  செங்கல்பட்டு  |   Published on : 11th July 2013 12:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடுவாஞ்சேரியை அடுத்த கொளப்பாக்கத்தில் பொதுமக்கள் போராட்டத்தையடுத்து டாஸ்மாக் கடை ஐந்தாவது முறையாக டாஸ்மாக் கடை புதன்கிழமை மூடப்பட்டது.
     கொளப்பாக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு அந்தக் கடை மூடப்பட்டது. இதனையடுத்து சில வாரம் இடைவெளி விட்டு கடையை திறப்பதும், மக்கள் போராட்டத்திற்கு பிறகு மூடுவதுமாக இருந்தது.
     ÷இதுபோன்று 5-வது முறையாக, டாஸ்மாக் கடையை ஊழியர்கள் புதன்கிழமை திறந்து விற்பனையில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொது மக்கள் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     ÷நெடுங்குன்றம் ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் ஊனை பார்த்திபன், பா.ம.க மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை, 5-வது முறையாக பூட்டி விட்டு சென்றனர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai